Friday, 28 June 2013

பழைய மாணவர்கள்

யா / இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்ரமணிய வித்தியாசாலை பழைய மாணவர் சங்க கூட்டம் எதிர்வரும் 30/06/2013 அன்று காலை 9 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெற உள்ளது. எனவே பழைய மாணவர்கள் அனைவரும் தவறாது சமூகம் அளிக்கவும்.

பழைய மாணவன்

Wednesday, 19 June 2013

கொஞ்சம் சிரியுங்கள்


************** 
மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் 
ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து 
கூண்டில் இருந்த எலி கேட்டது. எதுக்கு அவனைக் கொன்னேனு… 

புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப் 
பார்த்துச் சொல்றான் “எவ்ளோ பெரிய பூனை”ன்னு. 

************ 
காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி… 
தூங்கவும் முடியாது… தூரத்தவும் முடியாது…. 

************ 

அம்மா: என்னடா… இன்னிக்கு ஸ்கூல்ல இருந்து இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே? 

பையன்: எங்க மிஸ் ஒரு கேள்வி கேட்டாங்க, நான் மட்டும் தான் பதில் சொன்னேன். 
அம்மா: (சந்தோசமாக) என்ன கேள்வி கேட்டாங்க? 

பையன்: யார்ரா அது மிஸ் மேல சாக்பீஸ் அடிச்சதுன்னு கேட்டாங்க. 

************ 

மனைவி : என்னங்க பாருங்க உங்க பையன் பாடப்புத்தகத்தை எப்படிக் குதறி வச்சிருக்கான்னு? 

கணவன் : நான் தான் சொன்னேனே, அவன் படிப்புல புலின்னு. 

************ 

கணவன்: எனக்கு கால் வந்த நான் வீட்ல இல்லன்னு சொல்லு! கொஞ்ச நேரம் கழித்து மொபைலில் கால் வருகிறது… 
மனைவி: ஹலோ! என் கணவர் வீட்ல தான் இருக்கார்! 
கணவன்: ஏண்டி அப்படி சொன்ன? 
மனைவி: அது என்னோட லவர்! 
கணவன்: ?!?….. 
******************** 
எ‌ன் பொ‌ண்டா‌ட்டிய எ‌ன்ன தா‌ன் செ‌ய்றது? 

ஏ‌ன் எ‌ன்ன ப‌ண்றா‌ங்க? 

நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா. 

கார் ஓட்டி பாரேன்.


மரம் பேசுகிறது


உயரமாக வளர்வேன் 
எனக்கு தண்ணீர் ஊற்று... 

உனக்கு பழங்களை தரும் மரம் நான்..! 

இலையாய் உதிர்வேன் இலையுதிர் காலத்தில்... உன் 

இதயத்தை ரசிக்க வைக்கும் மரம் நான்..! 

கதவு, நாற்காலி செய்யலாம் என்னை வெட்டிடு... 

காகம். குருவிக்கு வீடே மரத்தில் கட்டிடு..! 

மழை பெய்தால் மேனமேலும் வளர்வேன்... என் 

மனசு உடைந்தால் மழை பெய்தாலும் 
ரோட்டில் விழுந்து கிடப்பேன்..!


Tuesday, 28 May 2013

ஒற்றையடிப் பாதை

புற்களுக்கு நடுவில்
அழகாய் நீண்டுச் சென்றிருக்கும்.
அதன் உருவகம் ஆச்சரியம்
தருபவையாகவே இருந்தது
கால்நடைகளும் கால்தடங்களும்
பூமியில் ரேகையிட்டு வைத்ததோ
என்று கூட எண்ணியிருக்கின்றேன்
ஊரைவிட்டு விலகி பிரதான பாதையிலிருந்து
கிளைத்து ஒரு நதியை போலவே
பயணித்து எல்லைகளை பிணைத்திருக்கும்
விபரம் அறியதுவங்கிய வயதுக்கு முன்
அதனுடன் சினேகம் இருந்தது
சைக்கிள் டயரை உருட்டி செல்வது
வாத்தியாருக்கு பயந்து தூரத்து
புளியமரத்தில் தஞ்சம்புகச் செல்வது
சக நண்பனுடன் சுற்றி திரிவது என்று
என் பால்யத்தின் தடங்கள் அப்பாதையில்
பதிந்து கிடந்தது.
அப்பாவிற்கு இன்னும் நெருக்கமாக
இருந்தது அப்பாவின் வேலைகளை
சுலபமாக்கவும் சாத்தியப்படுத்தவும்
இதுவே அதிகம் உதவியிருக்கும்
எப்போதும் அப்பாதைமண் அப்பாவின்
வெடித்த பாத இடுக்கில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
தாமதமாக வீடுதிரும்பும் ஆடுகளை கூட
இதுதான் அழைத்து வரும்
ஒற்றையடிப்பாதையை போலவே
பால்யத்தின் நினைவுகள்
மனவெளியில் நீண்டக் கோடாய்
பதிந்து கிடக்கின்றது அதன் வழியில்
சென்றால் திரும்பவும் பால்யத்திற்கே
சென்றுவிடுவோமா என்ற ஏக்கத்துடன்
அதன்றுகில் சாய்ந்த நாற்காலியில்
ஆடிக்கொண்டிருக்கின்றது கழிந்து
போன அகவைகள்.
பின்பற்றுதலையும் ஒன்றுபடுதலையும்
உணர்த்தியபடி புத்தனைபோலவே
மௌனமாய் உறைந்து கிடந்த
அப்பாதை இன்று இல்லை
"பெரிய" நிறுவனங்கள் மணலுக்காக
காடுகளையெல்லாம் வாங்கிக்கொண்ட
பின் ஒற்றையடிப்பாதையின்
தேவை நின்று போய் அழிந்து போனதாக
அப்பா சொன்னார்
பால்யத்தின் இளந்தடங்கள்
பதிந்து கிடந்த அந்த ஒற்றையடிப்பாதையை
மூடியபடி சென்றிருந்த கருத்த
தார்சாலையை பார்க்கையில்
நீண்டக் கல்லறையை போலவே தோற்றமளித்தது எனக்கு.