Tuesday, 28 May 2013

எங்கள் வீடு!..


பண்டைய வீடு இது
பாழடைந்த வீடு
பாதி உடைந்த வீடு-இது
பாவியர் நாங்கள் வாழும் வீடு
ஓட்டை வீடு இது
உடைந்த வீடு
ஒய்யாரமாய் நாங்கள் எண்ணிய வீடு
ஒழியவும் இடமின்றி
ஓரமும் ஒழுகும் வீடு
மழை நாளில் நனைத்திடும் வீடு
மனதை மகிழ்விக்கும் வீடு
மலைபோல் நான் எண்ணிய வீடு
பனித்துளியும் எங்களை நனைத்திடும் வீடு
ஆசையாய் அள்ளி அணைக்கும் வீடு
அயலவர் வியக்க நாங்கள் வாழ்ந்திடும் வீடு
சிட்டு குருவி போல் சஜா துள்ளிடும் வீடு
அவள் சிந்தும் புன்னகையால் எம்
உள்ளத்தை சிலிர்க்க வைக்கும் வீடு
ஏழையான எங்கள் வீடு-அதுதான்
ஏழ்மை சின்னமாக எமை காட்டும் வீடு
ஓட்டோடு மரமும்
ஓய்வின்றி உடைந்து விழும் வீடு
வறுமைகள் வசித்திடும் வீடு-இது
வள்ளலாய் எம் வாழ்வை மாற்றும் வீடு
மாளிகை வீடால்ல இது மங்காமல் எம் மனதை
மாளிகையாய் மாற்றும் வீடு!...

No comments:

Post a Comment