Tuesday, 28 May 2013

தண்டனையான வாழ்க்கை..

.



வாழ்க்கையின் போராட்டத்தில் யார்தான்
குற்றவாளி என்று தெரியாமலே
தண்டனை  கிடைக்கின்றது...
எதுதான் குற்றம்?...
நான் பிறந்தது குற்றமா?
இல்லை என்னை
பெற்றவர்கள்தான் குற்றவாளியா?
நான் வளர்ந்த விதம் குற்றமா?
இல்லை என்னை
வளர்த்த விதம்தான் குற்றமா?
சமூதாயம் குற்றமா?
இல்லை இந்த
இனத்தில் நான் பிறந்ததுதான் குற்றமா?
எது குற்றம் ஏன் தண்டனை
இந்த குற்றம் புரியவே இல்லை...
இந்த தண்டனை
புரியாத புதிராகவே இருக்கின்றதே...
நின்மதிக்காக ஆண்டவனிடம் கேட்கின்றோம்
செய்யாவிடில் ஆண்டவனும் குற்றவாளிதானே...
எதற்காக ஏன் பல கேள்விகள்
கேட்க தோன்றுகின்றது காரணம்
தப்பே செய்யாமல் தண்டனையா?...
குறிக்கோள் கொண்டதற்காக
குற்றவாளி என்னும் பட்டமா?
தலை வணங்குகின்றேன் இறைவா

No comments:

Post a Comment